தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சமூக விரோதிகளால் படுகொலைசெய்யப்பட்ட செய்தியாளர் - மக்களின் பாதுகாப்பு குறித்து தேமுதிக கேள்வி - Journalist assassinated by social enemies

சென்னை : ஊடகவியலாளர் மோசஸ் படுகொலையில் சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாக கைதுசெய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.

சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட செய்தியாளர் - தேமுதிக கடும் கண்டனம்!
சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட செய்தியாளர் - தேமுதிக கடும் கண்டனம்!

By

Published : Nov 9, 2020, 8:22 PM IST

இது தொடர்பாக அவர் இன்று (நவ. 09) வெளியிட்டுள்ள அறிக்கையில், "தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ் என்பவர் மணல் கொள்ளை குறித்து செய்தி சேகரித்ததால் அவரை ரவுடிகள் சிலர் படுகொலை செய்ததாக வெளியான செய்தி எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

மக்கள் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளித்து செய்தி சேகரிக்கும் தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கே இந்த நிலை என்றால், சராசரி மக்களின் நிலை என்ன?

இந்தக் கொலைக்கான காரணத்தைக் கண்டறிந்து, கொலையில் சம்பந்தபட்ட நபர்களை உடனடியாக கைதுசெய்து கடுமையான தண்டனை வழங்கி இனி வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறா வண்ணம் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், இந்த கொடூர நிகழ்வில் உயிரிழந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மோசசின் இறப்புக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்ளவதுடன், அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details