தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் கரோனா நோயாளிகளின் மரண எண்ணிக்கை உயர்கிறதா ? - Madurai News

மதுரை : சிவப்பு மண்டலப்பகுதியாக அறியப்படும் மதுரை இன்று ஒரே நாளில் கோவிட்-19 பாதிப்பால் 10 பேர் உயிரிழந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் கரோனா நோயாளிகள் மரண எண்ணிக்கை உயர்கிறதா ?
மதுரையில் கரோனா நோயாளிகள் மரண எண்ணிக்கை உயர்கிறதா ?

By

Published : Aug 1, 2020, 8:51 PM IST

உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கரோனா தொற்று இந்தியாவில் தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மூன்றாம் கட்ட அபாய நிலையை எட்டியிருக்கும் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிகிறது. இதன் காரணமாக சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள சென்னை மாவட்டம், தமிழ்நாட்டு அளவில் நான்காவது இடத்தில் உள்ளது. அங்கு 11 ஆயிரத்து 175 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா பாதிப்பைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் பணிகளில் காவல் துறை, பொதுப்பணித் துறை, சுகாதாரத் துறை என மாநகராட்சி நிர்வாகத்தின் பல்வேறு துறைசார்ந்தவர்களும் ஈடுபட்டுவருகின்றனர். முகக்கவசம், கபசுரக் குடிநீர் வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, மதுரையின் பல்வேறு பகுதிகளிலும் மருத்துவ முகாம் மற்றும் நடமாடும் பரிசோதனை மையங்களை அமைத்து மக்களுக்கு கரோனா கண்டறிதல் சோதனை செய்யப்பட்டுவருகிறது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 1) ஒரே நாளில் 250க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. குறிப்பாக, அதிக பாதிப்புள்ள பகுதியான திருப்பரங்குன்றம், மேலூர், செல்லூர், பரவை போன்ற இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற்றன.

இந்த மருத்துவ முகாம்களில் ஏறத்தாழ 3 ஆயிரம் நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். அதில் 166 நபர்களிடம் சிறு அறிகுறி தென்பட்டதால் அருகிலுள்ள கரோனா பரிசோதனை மையத்திற்கு சோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் கோவிட்-19 பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.

மாநகராட்சி நிர்வாகத்தின் இந்தப் பணிகளில் பல்வேறு தொண்டு நிறுவனங்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும், தன்னார்வலர்களும் பணியாற்றிவருகின்றனர். மருத்துவ முகாம்களை மாநகராட்சி ஆணையர் நாள்தோறும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுவருகிறார். மதுரையில் கரோனா தொற்றின் காரணமாக தற்போது 2 ஆயிரத்து 297 பேர் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதே போல, 8 ஆயிரத்து 631 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் 208 வீடு திரும்பி உள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details