உலகம் முழுவதும் இன்று மீனவர்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், "மீன்பிடித் தொழிலையும், மீனவர்கள் நலனையும், அவர்களின் வாழ்வாதாரமான மீன்வளத்தையும் போற்றும் இந்த நாளில், மீனவர்கள் அனைத்து வளமும், வேலைவாய்ப்பும் பெற்று மீன்பிடித் தொழிலில் மென்மேலும் செழிக்க வேண்டும்.
சர்வதேச மீனவர் நாள் - மு.க. ஸ்டாலின் வாழ்த்து - திமுக தலைவரும், தமிழ்நாடு எதிர்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின்
சென்னை: சர்வதேச மீனவர் நாளான இன்று (நவ.21) தமிழ்நாடு மீனவர்களுக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு சட்ப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
![சர்வதேச மீனவர் நாள் - மு.க. ஸ்டாலின் வாழ்த்து சர்வதேச மீனவர் தினம்- மு.க.ஸ்டாலின் வாழ்த்து!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-04:12:17:1605955337-126018483-1808925902600605-5510265608556822887-o-2111newsroom-1605955318-718.jpg)
சர்வதேச மீனவர் தினம்- மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தமிழ்நாடு மீனவர்களின் நலனை பாதுகாத்து, அவர்கள், அவர்களின் படகுகள் அந்நிய ராணுவத்தின் எந்தவிதமான தாக்குதலுக்கும், சேதத்திற்கும் உள்ளாகாமல் பாதுகாத்திட மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச மீனவர் நாளான இன்று வேண்டுகோள் விடுக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.