கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் வனக் காப்பளராகப் பணிபுரிந்துவருபவர் அனு நந்தினி (27). இவரும், போலுவம்பட்டி வனச்சரகத்தில் பணிபுரிந்துவரும் பயிற்சி வனச்சரக அலுவலர் கோகுல் (27) என்பவரும் கடந்த எட்டு மாதங்களாக காதலித்துவந்ததாக கூறப்படுகிறது.
சாதி மறுப்புத் திருமணம்: காதல் தம்பதி காவல் நிலையத்தில் தஞ்சம்! - சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதி
கோயம்புத்தூர்: காருண்யா நகர் காவல் நிலையத்தில் பாதுகாப்புக் கேட்டுத் தஞ்சமடைந்த காதல் தம்பதியை காவல் துறையினர் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டார் இவர்களின் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில் பெண் வீட்டாரின் எதிர்ப்பை மீறி அண்மையில் இருவரும் பெரியநாயக்கன்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர்.
இதையடுத்து பெண் வீட்டார் மிரட்டுவதாகக் கூறி பாதுகாப்புக் கேட்டு காருண்யா நகர் காவல் நிலையத்தில் காதல் தம்பதி தஞ்சமடைந்தனர். இதையடுத்து காவல் துறையினர் இருதரப்பினரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.