இந்திய கடலோர காவல்படையின் கப்பலான வைபவ் நேற்று வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டது. அப்போது, சரியாக அதிகாலை 5 மணியளவில் இந்திய எல்லையிலிருந்து நின்றிருந்தபோது மீன்பிடி விசைப்படகிலிருந்து உதவி கேட்டு தகவல் வந்துள்ளது.
இதனையடுத்து, விரைந்து சென்ற கடலோர காவல்படையினர் மணப்பாடு கடற்கரையில் இருந்து 48 நாட்டிக்கல் மைல் தொலைவில் மன்னார் வளைகுடா அருகே நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்டனர்.
இன்ஜின் அறையில் நீர் புகுந்ததால் மீன்பிடி படகு இயங்க முடியாத நிலை ஏற்பட்டதை கண்டறிந்த கடலோர காவல்படை மீட்புக் குழுவினர் படகின் இயந்திர அறையிலிருந்து கடல் நீர் வெளியேறினர். நீர் நீர்மட்டம் குறைந்ததை அடுத்து பழுதுபார்க்கும் பணியை மேற்கொண்டனர்.
இதனையடுத்து, இன்று அதிகாலை 3 மணியளவில் மீன்பிடி படகில் பயணித்த மீனவர்கள் பாதுகாப்பாக தருவாய்குளம் மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.
நீர்ச்சத்து வற்றி, மயங்கிக் கிடந்த மீனவர்கள் அனைவருக்கும் போதிய முதலுதவி அளிக்கப்பட்டதாகவும், தற்போது அவர்கள் நலமுடன் இருப்பதாகவும் கடலோர காவல்படை அலுவலர்கள் தெரிவித்தனர்.