தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காய்கறி விதைகள் மூலம் அப்துல் கலாம் உருவம் - மதுரை இளைஞர் அசத்தல்!

மதுரை: அப்துல் கலாமின் நினைவு நாளை முன்னிட்டு காய்கறி மற்றும் கனிகளின் விதைகளை கொண்டு அப்துல்கலாம் உருவத்தை இளைஞர் ஒருவர் வரைந்து அசத்தியுள்ளார்.

அப்துல் கலாம்
அப்துல் கலாம்

By

Published : Jul 27, 2020, 4:02 PM IST

மதுரை செனாய் நகர் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் அப்பகுதியில் வீடுவீடாக தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

இவர் கரோனா ஊரடங்கு காலத்தில் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் தன்னார்வலராக இணைந்து பல்வேறு மக்கள் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் இன்று (ஜூலை27) அனுசரிக்கப்படவுள்ள மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாளையொட்டி, அவர் தனது இலட்சிய ஆண்டாக கருதிய 2020 என்பதை தெரியப்படுத்தும் விதமாக அந்த இளைஞர் அட்டகாசமான செயலை செய்துள்ளார்.

அதாவது அவர், கொடிக்காய், சீத்தாப்பழம், சீயக்காய், வேங்கை மரம், புளிய மரம் உள்ளிட ஏழு வகையான பொருள்களால் 2020 விதைகளைக் கொண்டு அப்துல் கலாம் உருவப்படத்தை தயார் செய்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details