தமிழ்நாடு முழுவதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு உத்தரவை தமிழ்நாடு அரசு அமல்படுத்தியுள்ளது. இதன் காரணமாக குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகளும் இன்று (ஆகஸ்ட் 2) மூடப்பட்டுள்ளன.
இதை பயன்படுத்தி குமரி மாவட்டத்தில் பல பகுதிகளில் சட்டவிரோதமாக அதிக விலைக்கு கள்ளச் சந்தையில் மது விற்பனை நடைபெற்று வருகிறது. இதனிடையே, சுசீந்திரம் அருகே தெங்கம்புதூர் பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச் சந்தையில் மது விற்பனை நடைபெற்று வருவதாக குமரி மாவட்ட தனிப்படை பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.