தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு! - Hogenakkal tourist spot

தருமபுரி: ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் வருவாய் கோட்டாட்சியர் தணிகாசலம் ஆய்வு மேற்கொண்டார்.

ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் ஆய்வு
ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் ஆய்வு

By

Published : Oct 6, 2020, 5:43 PM IST

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாகச் சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு தடை நீடித்துவருகிறது.

கர்நாடக மாநில பகுதிகளில் பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் அம்மாநில அரசு கடந்த சில நாள்களுக்கு முன்பு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் தணிகாச்சலம் ஒகேனக்கல் பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

ஒகேனக்கல் மெயின் அருவி பகுதிகளில் பாதுகாப்பு கம்பி வலைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பது குறித்து ஆலோசனை செய்தார்.

ஒகேனக்கல் பகுதியில் உள்ள பரிசல் ஓட்டிகள், உணவு சமைப்பவர்கள், மீனவர்கள், மசாஜ் தொழிலாளர்களிடம் தொடர்ந்து அலுவலர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். விரைவில் ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் அனுமதி வழங்க வேண்டும் என்பது சுற்றுலா பயணிகள் மற்றும் ஒகேனக்கல் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details