தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாட்டிறைச்சி விற்பனையைத் தடைசெய்ய கோரும் இந்து மக்கள் கட்சி! - மாட்டிறைச்சி விற்பனையை தடை செய்ய வேண்டும்

சென்னை: தமிழர்கள் தெய்வமாக வணங்கக்கூடிய பசு மாடுகளை இறைச்சியாக விற்பனை செய்வதற்கு தடைவிதிக்க வேண்டுமென இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

மாட்டிறைச்சி விற்பனையை தடைசெய்ய கோரும் இந்து மக்கள் கட்சி !
மாட்டிறைச்சி விற்பனையை தடைசெய்ய கோரும் இந்து மக்கள் கட்சி !

By

Published : Aug 1, 2020, 3:30 AM IST

இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், "இந்துத் தமிழர்கள் தெய்வமாக வணங்கக் கூடிய பசுமாடுகளையும், ஜல்லிக்கட்டு காளைகளையும் அழிக்கும் வகையில் மாமிச உணவு என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் அதிகளவில் வியாபார மயமாக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மாடுகள் இறைச்சிக்காக லாரிகளில் கேரளா மற்றும் அண்டை மாநிலங்களுக்கு சட்ட விரோதமாகக் கடத்தப்பட்டுவருகின்றன. இதனால்‌ தமிழ்நாட்டின் கால்நடைச் செல்வங்கள் அழிந்து போகும் சூழல் உருவாகியுள்ளது.

பக்ரீத் பண்டிகையின்போது, கூட்டு குர்பானி என்ற பெயரிலிலே இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் சார்பில் கேட்டு குர்பானி திட்டம் என்று தமிழ்நாடு முழுவதும் பங்கு தொகையினை அறிவிப்பு பலகையில் வியாபாரம் செய்தும், போஸ்டர் மற்றும் பேனர்கள் மூலமாக மாட்டிறைச்சி விற்பனையை அங்கீகரித்து விளம்பரங்கள் செய்துவருகின்றன.

பெற்ற தாய்க்கு நிகராக மாடுகளைத் தெய்வமாக வணங்கக்கூடிய இந்து தமிழர்களுக்கு இதுபோன்ற செயல்பாடு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. உலகில் இஸ்லாமிய நாடுகளில் கூட்டு குர்பானி என்ற பெயரியே ஒட்டகத்தைப் பலியிட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் இந்துக்கள் வணங்கக்குடிய மாடுகளைப் பலியிட்டு, இரு சமூகத்தினரிடையே சட்டம் ஒழுங்கு பிரச்னை மூலம் தமிழ்நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த வேண்டுமென சிலர் திட்டம் தீட்டி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகள், நாட்டு மாடுகள் ஆகியவற்றின் படத்தைப் போட்டு கூட்டு குர்பானி விளம்பரம் செய்து வருகிறார்கள். இதுபோன்ற விளம்பரங்களை உடனடியாக அகற்றிட உத்தரவிட வேண்டும்.

தமிழ்நாடு அரசு உடனடியாக மாட்டிறைச்சி விற்பனை செய்பவர்கள் மீதும், திருட்டுத்தனமாக லாரிகளில் மாடுகளைக் கடத்துபவர்கள் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட வேண்டும். இதுபோன்ற கடத்தப்படுகின்ற மாட்டை மீட்டு மாவட்டந்தோறும் தமிழ்நாடு அரசு சார்பில் கோசாலைகள் அமைத்து பராமரித்திட முன்வர வேண்டும்.

அண்மைக் காலமாக சமூக வலைத்தளங்களில் மாட்டிறைச்சி உண்பது போலவும், மாடுகள் உனக்கு தெய்வம் என்றால் அதை நான் தின்பேன் என இந்துக்களின் மனம் புண்படக்கூடிய பல்வேறு வாசகத்துடன் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். இதுபோன்ற படங்களைப் பதிவேற்றம் செய்பவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details