தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10 ஆண்டுகளில் எத்தனை காட்டுத் தீ சம்பவங்கள் நடந்துள்ளன? உயர் நீதிமன்றம் கேள்வி - wild fire

மதுரை: கடந்த 10 ஆண்டுகளில் வனப்பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்துகள் எத்தனை என மாநில வாரியாக மத்திய அரசும், மாவட்டம் வாரியாக மாநில அரசும் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை கிளை

By

Published : Mar 24, 2019, 10:00 AM IST

Updated : Mar 24, 2019, 11:03 AM IST

மதுரையைச்சேர்ந்த வழக்குரைஞர் ஸ்டாலின் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் வனப்பகுதிகளில் அடிக்கடி அதிகளவில் தீ விபத்து ஏற்படுகிறது. இதனால் வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிகளை நோக்கி வருகின்றன. மேலும், வனப்பகுதிகளில் போதிய தண்ணீர் இல்லாமல் வனவிலங்குகள் பாதிப்புக்குள்ளாகின்றன.

குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பவர்கள் மேய்ச்சலுக்காக வனங்களை அழித்துவருகின்றனர். எனவே அரசு வனப்பகுதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வனங்களைப் பாதுகாக்க அதிக நிதி வழங்கப்பட்டுவருகிறது. அந்த நிதி எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது என்ற விவரத்தைத் தெரிவிக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள்,

  • வனத் துறையினுள் வனப்பாதுகாப்பு மற்றும் வனப்பகுதியின் அளவு என்ன?
  • கடந்த பத்து ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, அவ்வாறாயின் மரங்கள் எவ்வளவு தூரம் நடப்படுகின்றன?
  • நடப்பட்ட மரங்களைக் காப்பாற்றுவதற்கு போதுமான பாதுகாப்புகள் வழங்கப்பட்டதா?
  • போதுமான வன ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளார்களா? நிரப்பப்பட வேண்டிய பணி இடங்கள் எது?
  • கடந்த 10 ஆண்டுகளில் வனப்பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்துகள் எத்தனை என மாநில வாரியாக மத்திய அரசும், மாவட்டம் வாரியாக மாநில அரசும் கணக்கெடுத்து பதிலளிக்க வேண்டும்.
  • வனப்பகுதியில் தீ விபத்தைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
  • உலக வங்கி மூலம் பெறப்பட்ட நிதியில் எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது. நிதி மூலம் நடப்பட்ட மரங்கள் எவ்வளவு? நடப்பட்ட மரங்களில் எவ்வளவு உயிருடன் இருக்கின்றன?

ஆகிய கேள்விகளுக்கு மத்திய, மாநில அரசுகள் ஏப்ரல் 8ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கினை ஒத்திவைத்தனர்.

Last Updated : Mar 24, 2019, 11:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details