தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் கவர்னர் ஆட்சி வர வாய்ப்பிருக்கிறது - பாஜக சூசகம்! - BJP Starts Political game in Tamilnadu

கரூர் : கோவிட்-19 பாதிப்பு காரணமாக தேர்தலை தள்ளி வைக்க தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தால் தமிழ்நாட்டில் கவர்னர் ஆட்சி வர வாய்ப்பிருக்கிறதென பாஜக மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் கவர்னர் ஆட்சி வர வாய்ப்பிருக்கிறது - பாஜக சூசகம்!
தமிழ்நாட்டில் கவர்னர் ஆட்சி வர வாய்ப்பிருக்கிறது - பாஜக சூசகம்!

By

Published : Sep 25, 2020, 7:43 PM IST

கரூர் மாவட்டத்தில் பாஜக சார்பாக பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் மாநில பொது செயலாளர் சீனிவாசன் இன்று கரூர் வந்தார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பசுபதிபாளையத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அவர் பேசும்போது, "தமிழ்நாட்டில் அதிமுக, பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகளுடன் பாஜக அமைத்த நாடாளுமன்ற கூட்டணியும் நட்பும் இன்றும் தொடர்கிறது. கூட்டணி உடைவதாக சொல்லப்படுவது பொய்.

இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அதிமுக நம்முடைய நட்பு கட்சி. கூட்டணி கட்சி. நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியில் நின்றோம்.

சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த கூட்டணி தொடருமா ? வெற்றிபெறுமா ? என்றால் அது சட்டப்பேரவைத் தேர்தல் வரும்போது முடிவாகும். தமிழ்நாடு முதலமைச்சர் கூட அப்படித்தான் கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் தற்போதைய நிலவரப்படி கரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பு அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது.

இதன் காரணமாக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக ஏப்ரல், மே மாதங்களில் தமிழ்நாடு அரசும், தேர்தல் ஆணையமும் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பது குறித்து யாருக்கு தெரியவில்லை.

ஆயினும் மே மாதத்துடன் சட்டப்பேரவை முடிவடைய இருக்கிறது என்பதால் அதன்பிறகு அதிமுக ஆட்சிக்கட்டிலில் நீடிக்க முடியாது. அப்படி ஒருவேளை தேர்தல் ஆணையம் நோய்த்தொற்று காரணமாக தேர்தலை தள்ளி வைக்கலாம் என பரிந்துரை செய்தால் தமிழ்நாட்டில் கவர்னர் ஆட்சி வர வாய்ப்பு அதிகம். அதனால், தேர்தல் வருமா? என்று தெரியவில்லை. தேர்தல் வரும்போது கூட்டணி வருமா? என்பதை அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்றார்.

இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட அளவிலான பல்வேறு அணிகளைச் சேர்ந்த முக்கிய பொறுப்பாளர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details