தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கணினி உதவியாளர்களின் ஊதியத்தை உயர்த்திய அரசு !

சென்னை : மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கணினி உதவியாளர்களுக்கு மாத தொகுப்பு ஊதியத்தை 14 ஆயிரமாக உயர்த்த தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

கணினி உதவியாளர்களின் மாத தொகுப்பு ஊதியத்தை 14 ஆயிரமாக உயர்த்திய அரசு
கணினி உதவியாளர்களின் மாத தொகுப்பு ஊதியத்தை 14 ஆயிரமாக உயர்த்திய அரசு

By

Published : Nov 16, 2020, 9:47 PM IST

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,

"மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கணினி உதவியாளர்களுக்கு மாத தொகுப்பு ஊதியமாக 12 ஆயிரத்திலிருந்து 14 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கணிப்பொறி உதவியாளர்களாக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்துவரும் ஊழியர்களுக்கு 14000 ஊதியமாக வழங்கப்படும்.

இதன் மூலம், தமிழ்நாடு முழுவதும் பணியாற்றிவரும் 1843 கணினி உதவியாளர்கள் பயனடைவார்கள்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details