இது தொடர்பாக மகிழ்மதி அறக்கட்டளை சார்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா ஊரடங்கு காரணமாக பல நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஆலைகள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக, அந்நிறுவனங்கள் தங்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஊதியம் தர முடியாத சூழலில், வேலை வாய்ப்புகளும் குறைவாகவே உள்ள நிலையில் பல தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளன.
இதனால் தமிழ்நாட்டு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து கடும் நெருக்கடியை கண்டு வருகின்றனர். எனவே, தமிழக வேலைவாய்ப்புகளில் 70 விழுக்காடு தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது ஒதுக்கப்படுவது நியாயமில்லை.