தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை கராணமாக தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் திங்கட்கிழமை முதல் மளிகை கடை, எலக்ட்ரானிக்ஸ், மொபைல் , சலூன், ஜவுளி உள்ளிட்ட கடைகள் ஏசி இல்லாமல் இயங்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், காஞ்சிபுரம் பெருநகராட்சி பகுதியில் ஊரடங்கு விதிகளை மீறி திங்கட்கிழமை முதல் செயல்ப்பட வேண்டிய நகை, கண் கண்ணாடி, கல்யாண சீர்வரிசை பாத்திரங்கள் , ஜவுளி, உள்ளிட்ட பல்வேறு கடைகள் அனுமதியில்லாமல் திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு புகார் வந்தது.
ஊரடங்கை மீறி கடைகள் திறப்பு: ரூ.5 ஆயிரம் அபராதம்! இது குறித்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க காஞ்சிபுரம் பெருநகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். பின்னர், காஞ்சிபுரம் பெருநகராட்சி ஆணையர் காஞ்சிபுரம் செங்கழுநீரோடை பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட 25 க்கும் மேற்பட்ட கடைகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து தலா 2 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்தார். மேலும் ஊரடங்கு விதிகளை மீறி மீண்டும் கடைகள் திறக்கப்பட்டால் சீல் வைக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.
முன்னாதகவே பல்வேறு கடைகள் விதிகளை மீறி திறக்கப்பட்டு, சுப முகூர்த்த நிகழ்ச்சிகளுக்காக விற்பனை ஜோராக நடைபெற்றுள்ளதால் காஞ்சிபுரத்தில் மீண்டும் கரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.