தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சொத்து அபகரிப்பு காரணமாக விவசாயி தற்கொலை: உறவினர்கள் தர்ணா

தருமபுரி: விவசாயியின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி இரண்டாவது நாளாக உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உறவினர்கள் தர்ணா

By

Published : Jul 28, 2020, 3:48 PM IST

தருமபுரி மாவட்டம் இண்டூர் அடுத்த நத்தஅள்ளி பகுதியை சேர்ந்தவர் விவசாயி சூரப்பன். இவரின் பூர்வீக சொத்து 1 ஏக்கர் 17 சென்ட் அளவு நத்தஅள்ளியில் உள்ளது.

அவருக்கு ராஜா, கண்ணன் என்ற இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இருவரும் பூர்வீக சொத்தில் விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் 2003ஆம் ஆண்டு வறுமையின் காரணமாக சூரப்பன் தன் 44 சென்ட் நிலத்தை காவேரிபட்டணத்தை சேர்ந்த செல்லமுத்து என்பவரிடம் விற்பனை செய்துள்ளனர்.


மார்ச் மாதம் செல்லமுத்துவிடமிருந்து மல்லாபுரத்தை சேர்ந்த ரத்தினவேல் என்பவர் நிலத்தை வாங்கியதாகவும் அதில் பிழை திருத்தம் உள்ளதாகவும் கூறி சூரப்பன் அவரின் மகன் ராஜாவை தருமபுரி பத்திர பதிவு அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று முழு சொத்தையும் அவரின் பெயருக்கு மாற்றியதாக கூறப்படுகிறது.

பின்னர் ராஜா, கண்ணன் ஆகியோரிடம் நிலம் என்னுடையது நீங்கள் இடத்தை விட்டு காலி செய்யுமாறு ரத்தினவேல் கூறியுள்ளார்.


பத்திரத்தில் தவறுதலாக ராஜா, அவரின் தந்தை சூரப்பன் கையொப்பமிட்டதை அறிந்து ராஜா தன் வீட்டில் சோகமாக காணப்பட்டு வந்தார்.

ரத்தனவேலிடம் தங்கள் சொத்து அபகரித்தது தவறு என்று பல முறை முறையிட்டும் ஊரில் உள்ள பொதுமக்கள் முன்னிலையில் சமரசம் பேசியுள்ளனர். ரத்தினவேல் தங்கள் நிலத்தை அபகரித்ததை நினைத்து ராஜா நேற்று( ஜூலை 27) காலை தன் வீட்டின் அருகே உள்ள வேப்பமரத்தில் அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்து வந்த உறவினர்கள் ஊர்மக்கள் இண்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததின் பெயரில் அங்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் ஊர் மக்கள் இண்டூர் காவல் நிலையத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என புகார் மனு அளித்தனர்.

அதன்பின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு குற்றவாளிகளை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவதாக பிணவறை முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

இன்றும்( ஜூலை 28) நத்தஅள்ளி பொதுமக்கள் இண்டூா் பேருந்து நிலையத்தில் குவிந்து தொடர்ந்து இரண்டாவது நாளாக தா்ணாவில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பொன்னாகரம் துணை காவல் கண்காணிப்பாளா் மேகலா, நல்லம்பள்ளி வட்டாட்சியா் சரவணன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தியதில் சமரசம் ஏற்பட்டதால் போராட்டத்தை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

ABOUT THE AUTHOR

...view details