தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனிப்படை மருத்துவக்குழு சோதனையில் சிக்கிய திண்டுக்கல் போலி மருத்துவர் !

திண்டுக்கல்: நத்தம் பகுதியில் ஆயுர்வேத மருத்துவமனை நடத்திவந்த போலி மருத்துவரை, தனிப்படை மருத்துவக்குழுவினரின் அறிவுறுத்தலின்பேரில் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

தனிப்படை மருத்துவகுழு சோதனையில் சிக்கிய திண்டுக்கல் போலி மருத்துவர் !
தனிப்படை மருத்துவகுழு சோதனையில் சிக்கிய திண்டுக்கல் போலி மருத்துவர் !

By

Published : Sep 4, 2020, 2:15 PM IST

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஒன்றிய அலுவலகம் அருகே பிரகாஸ் மண்டல் (37) என்பவர் லெட்சுமி ஆயுர்வேதிக் சென்டர் என்ற மருத்துவமனை நடத்திவந்துள்ளார்.

இந்நிலையில் நத்தம் பகுதியில் ஏராளமான நோயாளிகளுக்கு இவர் பல மாதங்களாக மருத்துவம் பார்த்து மருந்து, மாத்திரைகள் கொடுப்பதாக மாவட்ட மருத்துவத் துறைக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, சந்தேகமடைந்த திண்டுக்கல் மாவட்ட தனிப்படை மருத்துவக்குழு, அவரது இருப்பிடம் சென்று அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பிரகாஸ் மண்டல் 9ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தது தெரியவந்தது‌.

மருத்துவர் எனப் பொய் சொல்லி பொதுமக்களுக்கு பல ஆண்டுகளாக மருத்துவம் பார்த்துவந்தது உறுதியானதால் மருத்துவக்குழுவினர் அவரை நத்தம் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details