தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. விருதுநகர் மாவட்டத்திலும் கரோனாவின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. இச்சூழலில் மாவட்டத்தில் இன்று புதிதாக எட்டு பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
விருதுநகரில் இன்று ஒரே நாளில் 8 பேருக்கு கரோனா! - Corona cases in Tamil Nadu
விருதுநகர்: மாவட்டத்தில் இன்று புதிதாக எட்டு பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
![விருதுநகரில் இன்று ஒரே நாளில் 8 பேருக்கு கரோனா! Corona ward](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-08:35-tn-vnr-04-corona-attack-vis-script-7204885-13062020203316-1306f-1592060596-411.jpg)
Corona ward
பஞ்சாப், குவைத்திலிருந்து வந்த இரண்டு ஆண்கள், மகாராஷ்டிராவிலிருந்து திருச்சுழி பூலாங்கல் வந்த 35 வயது பெண், அவரின் 14 வயது மகள் மற்றும் 7 வயது மகன், சென்னையிலிருந்து வந்த 28 வயது ஆண், விருதுநகர் சின்னபேராலியைச் சேர்ந்த 54 வயது பெண், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த 63 வயது ஆண் என எட்டு பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.