தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குற்றப்பின்னணி குறித்த விவரங்களை ஊடகங்களில் வேட்பாளர்கள் வெளியிட வேண்டும்! - Election Commission of India

சென்னை : தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் தங்களது குற்றப்பின்னணி விவரங்கள் குறித்து நாளிதழ்கள், ஊடகங்களில் கட்சிகள் வெளியிட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

குற்றப்பின்னணி குறித்த விவரங்களை  ஊடகங்களில் வேட்பாளர்கள்  வெளியிட வேண்டும்!
குற்றப்பின்னணி குறித்த விவரங்களை ஊடகங்களில் வேட்பாளர்கள் வெளியிட வேண்டும்!

By

Published : Sep 11, 2020, 8:54 PM IST

இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேர்தல்களில் போட்டியிடும் குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நான்கு நாள்களுக்கு முன்பு ஒரு முறையும், ஐந்தாவது மற்றும் எட்டாவது நாள்களுக்குள் இரண்டாவது முறையும், வாக்குப் பதிவுக்கு இரண்டு நாள் முன்னதாக மூன்றாவது முறையும் தங்களது குற்றப் பின்னணி விவரங்களை பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி போன்ற மின்னணு ஊடகங்களில் வெளியிட வேண்டும் என தேர்தல் ஆணையத்தின் திருத்தப்பட்ட அறிவிக்கை கூறுகிறது" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details