தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொழில்நுட்பம் குறித்து ஃபிக்கி சார்பில் இணையவழி கருத்தரங்கம் - ஊடக பங்குதாரராக ஈடிவி பாரத் - E-Seminar on Technology on behalf of FICCI

சென்னை: தொழில்நுட்பம் வாயிலாக வளர்ச்சி மற்றும் வாய்ப்புகள் எனும் தலைப்பின் கீழ் இந்திய தொழில்துறை கூட்டமைப்பான ஃபிக்கி சார்பில் இருநாள் இணைய வழி கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

தொழில்நுட்பம் குறித்து ஃபிக்கி சார்பில் இணையவழி கருத்தரங்கம் - ஊடக பங்குதாரராக ஈ டி.வி பாரத் !
தொழில்நுட்பம் குறித்து ஃபிக்கி சார்பில் இணையவழி கருத்தரங்கம் - ஊடக பங்குதாரராக ஈ டி.வி பாரத் !

By

Published : Oct 5, 2020, 10:36 PM IST

கரோனா பாதிப்புக்கு இடையே தொழில்நுட்ப பயன்பாட்டை மேலும் அதிகரிப்பது தொடர்பாகவும், பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைவது தொடர்பாகவும், இந்திய தொழில்துறை கூட்டமைப்பான ஃபிக்கி சார்பில் வரும் அக். 9,10 ஆகிய இரு நாள்களில் 'டிகோ' (TEGO) எனும் இணையவழி கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

இந்த கருத்தரங்குடன் தொழில்நுட்பம் தொடர்பான கண்காட்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் இதனை தொடங்கிவைக்கிறார்.

இந்த கருத்தரங்கில் இணைய பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்வது குறித்து விவாதிக்கப்படும். டிஜிட்டல் மார்கெட்டிங், இணைய வழி வர்த்தகம், இந்திய செயலிகள், ஆரோக்கிய தொழில்நுட்பங்கள், தானியங்கி தொழில்நுட்பம், 3டி பிரின்டிங் உள்ளிட்ட தொழில்-வணிகம் குறித்து ஆலோசிக்கப்படும்.

இந்த கருத்தரங்கில், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, தமிழ்நாடு இ-கவர்னன்ஸ் ஆணையர் சந்தோஷ் மிஷ்ரா, அடல்ட் இன்னோவேஷ் இயக்குநரும், நிதி ஆயோக்கின் கூடுதல் செயலாளருமான ரமணன் ராமநாதன், தொழில்துறை மூத்த நிர்வாகிகள், ஸ்ராட்அப் நிறுவனத் தலைவர்கள் உள்ளிட்ட 400 -க்கும் மேற்பட்ட தொழில்துறையினர் கலந்துகொள்கின்றனர்.

இந்த இணைய வழி கருத்தரங்கில் நமது ஈடிவி பாரத் தளம் ஊடக பங்குதாரராக இணைந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details