தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேகேதாட்டு திட்டத்திற்கு மத்திய அரசு முன்பே ஒப்புதல் வழங்கியதா? - பழ.நெடுமாறன் கேள்வி - உச்சநீதிமன்றத் தீர்ப்பு

சென்னை: தமிழ்நாட்டிற்குப் பாதிப்பில்லாமல் மேகேதாட்டு அணைத் திட்டம் அணுகப்படுமென பிரதமர் மோடி கூறியிருப்பது, அந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு முன்பே ஒப்புதல் அளித்துள்ளது என்பதைக் காட்டுவதாகத் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

மேகதாட்டுத் திட்டத்திற்கு மத்திய அரசு முன்பே ஒப்புதல் வழங்கியதா ? - பழ.நெடுமாறன் கேள்வி
மேகதாட்டுத் திட்டத்திற்கு மத்திய அரசு முன்பே ஒப்புதல் வழங்கியதா ? - பழ.நெடுமாறன் கேள்வி

By

Published : Sep 23, 2020, 5:52 PM IST

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டிற்குப் பாதிப்பில்லாமல் கர்நாடகத்தின் மேகேதாட்டு அணைத் திட்டம் அணுகப்படும் எனப் பிரதமர் மோடி, தன்னைச் சந்தித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்குறுதி கொடுத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது உண்மையானால், மேகேதாட்டு அணைத் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கப்போகிறது என்பது இச்செய்தியின் மூலம் வெளிப்பட்டுள்ளது. இதைவிடப் பேரபாயம் தமிழ்நாட்டிற்கு வேறில்லை. மேகேதாட்டு அணைக் கட்டப்பட்டுவிட்டால், தமிழ்நாட்டிற்கு வந்துகொண்டிருக்கும் காவிரி நீர் முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுவிடும் என்பதில் ஐயமில்லை.

காவிரிப் படுகைப் பகுதியைச் சேர்ந்த மாநிலங்கள் ஏதேனும் புதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பாக, அப்பகுதியைச் சேர்ந்த பிற மாநிலங்களின் ஒப்புதலைப் பெற வேண்டுமென ஏற்கனவே இந்திய அரசு வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. இதுவரை தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் ஒப்புதலை கர்நாடக அரசு பெறவில்லை.

1961ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் எல்லைக்குள் ஒகேனக்கல் அருகே இராசி மணல் என்னும் இடத்தில் அணைக் கட்டி புனல் மின் நிலையம் ஒன்றை அமைக்கத் தமிழ்நாடு வகுத்தத் திட்டத்திற்கு கர்நாடக அரசு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டது. எனவே, திட்டக்குழுவும், மத்திய அரசும் இத்திட்டத்திற்கு ஒப்புதல் கொடுக்கவில்லை.

ஆனால், இப்போது ஒகேனக்கல்லுக்கு மிக அருகில் கர்நாடக எல்லைப் பகுதியில் மேகேதாட்டுத் திட்டம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தால், அது தமிழ்நாட்டின் நலன்களைப் பெரிதும் பாதிக்கும்.

இது தொடர்பாக 1961ஆம் ஆண்டில் தொடுக்கப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது என்பதை நினைவுப்படுத்துகிறேன்.

ஏற்கனவே, நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை காவிரிப் பிரச்னையில் அளித்த தீர்ப்புகளையோ அல்லது மத்திய அரசின் வழிகாட்டுதல்களையோ கர்நாடகம் கொஞ்சமும் மதிக்கவில்லை.

1974ஆம் ஆண்டிற்கு முன்பாக காவிரியில் 300 டி.எம்.சி.க்கு குறையாமல் நமக்கு நீர் வந்துகொண்டிருந்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் விளைவாக இப்போது 177 டி.எம்.சி. நீர் மட்டுமே அதுவும், கர்நாடகம் விரும்பினால் மட்டும் கிடைக்கும் நிலையில் தமிழ்நாடு தவிக்கிறது.

இப்பிரச்னையில் தமிழ்நாட்டின் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து மேகேதாட்டு திட்டத்தைத் தடுத்து நிறுத்துமாறு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முன்வர வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details