தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கிரிமினல் நோக்கத்துடன் திமுகவினர் செயல்படுகின்றனர்' - நிலோபர் கபில் - அஇஅதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை

திருப்பத்தூர் : தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க கிரிமினல் நோக்கத்துடன் திமுகவினர் செயல்படுவதாக தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திமுகவினர் கிரிமினல் நோக்கத்தோடு செயல்படுகின்றனர் - நிலோபர் கபில்
திமுகவினர் கிரிமினல் நோக்கத்தோடு செயல்படுகின்றனர் - நிலோபர் கபில்

By

Published : Nov 13, 2020, 6:48 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆண்டியப்பனூரில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் நிலோபர் கபில், இளைஞர், இளம்பெண்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

பின்னர் கூட்டத்தில் பேசிய அவர், "2021ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து திமுகவினர் மக்களிடையே பொய் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

அக்கட்சியினர் லேப்டாப் வைத்துக் கொண்டு தெருவில் வரும் பெண்களிடம் உங்கள் வீட்டில் ஃபிரிட்ஜ், வாசிங்மிஷின், தையல் மிஷன் போன்றவை இருக்கிறதா ? என கேட்கின்றனர். அடுத்து திமுக ஆட்சி தான்.

திமுக ஆட்சியில் இவற்றையெல்லாம் இலவசமாக தருகிறோம் என ஆசை வார்த்தை கூறி வருகின்றனர். ஆட்சியை பிடிக்க கிரிமினல் நோக்கத்தோடு அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details