ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றிவந்த கலாநிதி நெருக்கடி தனது காலத்தில் அரசு பணியை துறந்து தன்னை திமுகவில் இணைத்து கொண்டு, தீவிரமாக அரசியலில் ஈடுபட்டுவந்தார்.
அதன் பின்னர் 1980, 1984 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்டு இருமுறையும் வெற்றி பெற்று, மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து அவர் விலகியிருந்ததாக அறியமுடிகிறது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி கலாநிதி மனைவி உடல்நல குறைவால் இயற்கை எய்தினார். இதன் காரணமாக மனதளவில் கடும் பாதிப்பிற்குள்ளாகி இருந்த கலாநிதிக்கு இன்று காலை நெஞ்சு வலி ஏற்பட்டதாக தெரிகிறது.