திருவண்ணாமலை, செட்டித் தெருவில் உள்ள உண்ணாமலை திருமண மண்டபத்தில், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜகவின் மண்டல நிர்வாகிகள், மாவட்ட அணியுடன் பிரிவு நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
இந்தக் கூட்டத்திற்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். பாஜக மாநில வர்த்தக அணி துணைத் தலைவர் எஸ்.தணிகைவேலும் இதில் பங்கேற்றார்.
”திமுக ஒரு போதும் ஆட்சிக்கு வர முடியாது” - கே.டி.ராகவன் காட்டம் - திமுக ஸ்டாலின்
திருவண்ணாமலை : தமிழ்நாட்டிற்கு பல்வேறு துரோகங்களை இழைத்துள்ள திமுக ஒரு போதும் ஆட்சிக்கு வர முடியாது என பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் தெரிவித்துள்ளார்.
”தெற்கு தேய்கிறது, வடக்கு வாழ்கிறது” என்று தமிழ்நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏ.பி.ஜே.அப்துல் கலாமை, பாஜக குடியரசுத் தலைவராக நியமித்தபோது, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் மீண்டும் குடியரசுத் தலைவராக பதவிக்கு வருவதை எதிர்த்தவர் கருணாநிதி.
கரோனா நோய்த்தொற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 ஆயிரத்தை நெருங்கும் வேளையில்,இந்தக் கூட்டத்தில் 300க்கும் மேற்பட்ட பாஜக மாவட்ட மண்டல அணி பிரிவு நிர்வாகிகள் தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்காமல் கலந்து கொண்டது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.