திண்டுக்கல் அருகே உள்ள சாலையூர் பகுதியில் மதுபானக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இதன் அருகே வெல்டிங் வேலை பார்த்து வந்த மணிகண்டன் என்பவர் தனது நண்பர்களுடன் மது அருந்துவதற்காக மதுபானக் கடைக்கு எதிரே உள்ள காட்டுப்பகுதிக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் மணிகண்டனை, அவர் நண்பர்கள் தாங்கள் அருந்திய மதுபாட்டிலை கொண்டு கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்து உடலை காட்டுப்பகுதியில் தூக்கி எறிந்து சென்றுவிட்டனர்.
திண்டுக்கல்லில் இளைஞர் கழுத்தறுக்கப்பட்டு கொலை! - சாலையூர் இளைஞர் கொலை
திண்டுக்கல்: காட்டுப்பகுதியில் நண்பர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் மதுபாட்டிலால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார்.
Murder
இந்தத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கொலைக்கு பயன்படுத்திய பாட்டில் துண்டுகளை வைத்து முதற்கட்ட விசாரணையை தொடங்கினர்.
மேலும், சம்பவ இடத்தில் மோப்ப நாயின் உதவியுடன் அடுத்த கட்ட விசாரணையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.