இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக மருத்துவர் கஃபில் கானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உத்தரப்பிரதேச மாநில அரசு கைது செய்தது.
அவர் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் முதல் மதுரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் அவரது தாய் நுஸ்ரத் கான் உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததை அடுத்து, வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 15 தினங்களுக்குள் இது குறித்து முடிவு எடுக்குமாறு அலகாபாத் நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.