தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வேளாண் சட்டங்களை ஆதரிக்கும் ஒரே விவசாயி முதலமைச்சர் பழனிசாமி மட்டும்தான்' - முத்தரசன் - new agri bill 2020

நாகை: மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் முதலமைச்சர் விவசாயிகளின் முதுகில் குத்திய துரோகியாவார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கடுமையாக சாடியுள்ளார்.

முத்தரசன்
முத்தரசன்

By

Published : Sep 21, 2020, 5:12 AM IST

வேளாண் பொருள் விற்பனை ஒழுங்குமுறை சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம், வேளாண் சேவையில் திருத்தச் சட்டம் உள்ளிட்ட மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மூன்று சட்டங்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் இச்சட்டங்களுக்கு வரவேற்பு அளித்துள்ளார்.

இந்த நிலையில், நாகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், " இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், வியாபாரிகளுக்கு குறைந்தபட்சம் ஆதரவிலை கிடைக்காது, பெரும் வியாபாரிகள் மட்டுமே வேளாண் பொருட்களை இருப்பு வைத்து கள்ளச் சந்தையில் விற்பனை செய்யமுடியும்.

மேலும், முதலமைச்சர் எடப்பாடி, உண்மையான விவசாயியாக இருந்தால், அதிமுகவின் ஒன்பது மாநிலங்களவை உறுப்பினர்களும் இந்த மசோதாவிற்கு வாக்களித்திருக்க மாற்றார்கள்.

அதனால் நீங்கள் மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததால் விவசாயிகளின் முதுகில் குத்திய துரோகியாவார். விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் சட்டங்களை ஆதரிக்கும் ஒரே விவசாயி, தமிழ்நாடு முதலமைச்சர் " எனக் கடுமையாக சாடினார்.

மேலும், இந்த சட்டங்களுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் முத்தரசன் அறிவித்தார்.

தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, திமுக தலைமையிலான தங்களது மெகா கூட்டணி தொடரும் என்றும், தங்கள் கூட்டணி பலமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details