தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவிட்-19 நோயாளிகளின் வீடுகளில் தகரம் அடிக்கப்படுவது ஏன்? - சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை : கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடு மற்றும் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் தகரம் அடிக்கப்படுவதற்கான காரணம் குறித்து சென்னை மாநகராட்சியை பதிலளிக்கக் கோரி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவிட்-19 நோயாளிகளின் வீடுகளில் தகரம் அடிக்கப்படுவது ஏன் ? - சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
கோவிட்-19 நோயாளிகளின் வீடுகளில் தகரம் அடிக்கப்படுவது ஏன் ? - சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

By

Published : Oct 6, 2020, 1:08 PM IST

சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் பிரியங்கா உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "என்னுடைய கணவருக்கு அறிகுறியே இல்லாத கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மாநகராட்சி அலுவலர்கள் எங்களிடம் எங்கு சிகிச்சைப் பெறுகிறீர்கள் என்று ஒப்புதல் கூட கேட்காமல் என்னுடைய கணவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக வலுக்கட்டாயமாக சிகிச்சை மையத்திற்கு அவரை அழைத்துச் சென்றனர். என் கணவர் அனுமதிக்கப்பட்ட கோவிட்-19 சிகிச்சை மையத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. தனிமனித இடைவெளியும் பின்பற்றப்படவில்லை” என அவர் கூறினார்.

அதேபோல, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பின்னர் எங்கள் வீட்டு முகப்பைத் தகரம் வைத்து அடைத்தனர்.

சென்னை மாநகராட்சியின் இந்த செயல் எங்களை மனதளவில் பெரிதும் பாதித்துள்ளது. அறிகுறிகள் இல்லாத அல்லது குறைவான அறிகுறிகள் உடன் கரோனா பாதித்தவர்களை கரோனா மையத்தில் தான் சிகிச்சைப் பெற வேண்டும் எனக் கட்டாயபடுத்தக் கூடாது என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கோரியுள்ளார்.

இந்த மனுவானது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பாக இன்று (அக்.06) விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், ”கரோனா பாதிக்கப்பட்டவரின் வீடு மற்றும் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் தகரம் அடிக்கபடுவதன் காரணம் என்ன? என்ன விதியின் அடிப்படையில் தரகம் அடிக்கப்படுகிறது?” என்று கேள்வியெழுப்பி, இது தொடர்பாக பதிலளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும் உத்தரவிட்டது.

ABOUT THE AUTHOR

...view details