கரோனா வைரஸ் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாட்டில் உள்ள 86 ஆய்வகங்கள் மூலம் 29 ஆயிரத்து 963 நபர்களுக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நேற்று(ஜூன் 21) மட்டும் 2,532 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை 8 லட்சத்து 51 ஆயிரத்து 556 நபர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் 59 ஆயிரத்து 377 நபர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது 25 ஆயிரத்து 863 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சிகிச்சைப் பெற்றவர்களில் 1,438 நபர்கள் குணமடைந்து நேற்று (ஜூன் 21) வீடு திரும்பினர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 756 நபர்களாக அதிகரித்துள்ளது.
இதையடுத்து சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்று (ஜூன் 21) மட்டும் 53 பேர் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 757ஆக உயர்ந்துள்ளது. இதில் கரோனா வைரஸ் தொற்றுடன் வேறு நோய்கள் இல்லாத 3 நபர்களும், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் உடன் இருந்த 50 நபர்களும் இறந்துள்ளனர்.
தலைநகர் சென்னையில் 41 ஆயிரத்து 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 17 ஆயிரத்து 683 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை 601 பேர் இறந்துள்ளனர்.
மாவட்டம் வாரியாக கரோனா பாதிப்பு:
சென்னை - 41,172
செங்கல்பட்டு - 3,745
திருவள்ளூர் - 2,534
காஞ்சிபுரம் - 1,159
திருவண்ணாமலை - 1,060
கடலூர் - 765
மதுரை - 705
திருநெல்வேலி - 640
விழுப்புரம் - 581
தூத்துக்குடி - 577
வேலூர் - 477
ராணிப்பேட்டை - 470
அரியலூர் - 420
கள்ளக்குறிச்சி - 387
சேலம் - 335
திண்டுக்கல் - 305
ராமநாதபுரம் - 299