தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெளிநாடுகளிலிருந்து சிறப்பு விமானத்தில் வந்த மூவருக்கு கரோனா! - One person corona confirm who arrived on special Flight in cuttar

சென்னை: கத்தார், நைஜீரியா நாடுகளிலிருந்து சிறப்பு விமானத்தில் சென்னை வந்த மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Corona Confirm who arrived on a special flight in other countries
Corona Confirm who arrived on a special flight in other countries

By

Published : Jun 23, 2020, 9:28 AM IST

உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளதால் ஏராளமான இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் கடும் அவதிக்குள்ளானார்கள்.

இவர்கள் தாய்நாடு திரும்பும் வகையில், கடந்த மே மாதம் 7 ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு 'வந்தே பாரத்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா, துபாய், ஜப்பான், கொரியா, மியான்மார், மஸ்கட், பிலிப்பைன்ஸ் போன்ற 15 நாடுகளில் இருந்து 13 ஆயிரத்து 46 பேர் வந்தனர்.

இவர்களுக்கு விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். கரோனா தொற்று இல்லாமல் 14 நாள் தங்கியிருந்தவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தனிமைப்படுத்தல் காலம் முடியாதவர்கள் முகாமங்களில் தங்க வைக்கப்பட்டனர். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 262 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதில், 119 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில், முகாமில் தங்கியிருந்தவர்களில் மீண்டும் செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கத்தாரில் இருந்து வந்த ஒருவருக்கும் நைஜீரியாவில் இருந்து வந்த இரண்டு பேருக்கும் என மூன்று பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.

இவர்களுக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 265 ஆக உயர்ந்தது.

அதே போல் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்திற்கு பல்வேறு நகரங்களில் இருந்து வந்த 720 விமானங்களில் 45 ஆயிரத்து 502 பேர் வந்து உள்ளனர்.

இவர்கள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். உள்நாட்டு முனையத்தில் வந்தவர்களில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது.

இதன் காரணமாக உள்நாட்டு முனையத்தில் வந்தவர்களில் கரோனா தொற்று பாதிப்பு 53 ஆக உயர்ந்தது. இவர்களுக்கும் தொடர்ந்து அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதையும் படிங்க:மருத்துவருக்கு கரோனா - மூடப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

ABOUT THE AUTHOR

...view details