தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கள்ளக்குறிச்சியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடக்கம்! - கரோனா விவரங்கள்

கள்ளக்குறிச்சி: அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 18 முதல் 44 வயது உடையவர்களுக்குக் கரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் இன்று (மே 25) தொடங்கியது.

கள்ளக்குறிச்சியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடக்கம்!
கள்ளக்குறிச்சியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடக்கம்!

By

Published : May 25, 2021, 6:20 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 18 முதல் 44 வயது உடையவர்களுக்குக் கரோனா தடுப்பூசி போடும் முகாம் இன்று (மே 25) தொடங்கியது. இந்த கரோனா தடுப்பூசி முகாமினை சட்டப்பேரவை உறுப்பினர்கள் ரிசிவந்தியம் வசந்தம் கார்த்திகேயன், செந்தில்குமார், மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

இந்த முகாமில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details