தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடரும் கன மழை காரணமாக நிரம்பிய ஏரி - மகிழ்ச்சியில் விவசாயிகள் - Salem continuous heavy rainfall

சேலம் : தொடர் கன மழை காரணமாக சேலம் தீவட்டிப்பட்டியை அடுத்துள்ள டேனிஷ்பேட்டை ஏரி நிரம்பியுள்ளதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடரும் கன மழை காரணமாக நிரம்பிய ஏரி - மகிழ்ச்சியில் விவசாயிகள்
தொடரும் கன மழை காரணமாக நிரம்பிய ஏரி - மகிழ்ச்சியில் விவசாயிகள்

By

Published : Oct 11, 2020, 6:49 PM IST

சேலம் மாவட்டத்தில் ஓமலூர், காடையாம்பட்டி, தீவட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக தொடர் கன மழை பொழிந்து வருகிறது.

குறிப்பாக, சேர்வராயன் மலைத்தொடரை ஒட்டிய டேனிஷ்பேட்டை ஊராட்சி அருகே உருவாகும் சரபங்கா ஆற்றிப் பகுதியில் தொடர்ந்து சாரல்மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கால்வாய்களில் மழைநீர் அதிகரித்து டேனிஷ்பேட்டை ஏரி முழுமையாக தண்ணீர் நிரம்பியுள்ளது.

நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து நூற்றுக்கனக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெரும் என்பதால் ஓமலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள 12க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கன மழை தொடரும் காரணத்தால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால், பயிர்கள் சேதமாகாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரி நீரை சிறிது சிறிதாக வெளியேற்றும் பணியில் பொதுப்பணித் துறை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details