தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகை வனிதா மீது காங்கிரஸ் கட்சியினர் புகார்! - நடிகை வனிதா மீது காங்கிரஸ் கட்சியினர் புகார்

தஞ்சை: சமூக வலைதளங்களில் தஞ்சை மக்களின் வாழ்க்கை முறை குறித்து தவறாக பேசிய நடிகை வனிதா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்தனர்.

Congress Party Petition Against Actress Vanitha
Congress Party Petition Against Actress Vanitha

By

Published : Jul 23, 2020, 4:13 PM IST

திரைப்பட நடிகை வனிதா விஜயகுமார், கடந்த சில நாள்களுக்கு முன்னர் சமூக வலைதளத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ளவர்கள் அனைவரும் இரண்டு திருமணம் செய்துகொள்வார்கள் என பேசியிருந்த ஆடியோ தற்போது வைரலாகியுள்ளது.

வனிதாவின் இந்த ஆடியோ பேச்சு தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிகழ்வைக் கண்டித்து தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் சிவா தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் வனிதா விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

மேலும் தமிழ் கலாசாரத்தைப் பின்பற்றிவரும் தஞ்சை மக்களின் மனதை புண்படுத்திய வனிதா விஜயகுமார் உடனடியாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:கறுப்பர் கூட்டத்திற்கும் ஸ்டாலினுக்கும் என்ன சம்பந்தம் -பாஜக முருகன் கேள்வி!

ABOUT THE AUTHOR

...view details