தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு! - அலட்சியத்தால் கடலூரில் நிகழ்ந்த சோகம்! - கடலூர் மாவட்ட செய்திகள்

கடலூர்: பண்ருட்டியை அடுத்த பண்டரக்கோட்டையில் புதியதாக கட்டப்பட்டிருந்த கழிவுநீர் சேகரிப்புத் தொட்டியில் (Septic Tank) தேங்கியிருந்த மழை நீரில் விழுந்து இரண்டரை வயது குழந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த குழந்தை

By

Published : Oct 30, 2019, 11:25 AM IST

விழுப்புரம் மாவட்டம் கப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மகாராஜன்-பிரியா தம்பதி. இவர்களின் குழந்தை பவளவல்லி(2).

இந்நிலையில், பிரியாவின் தாய்வீடு கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த பண்டரகோட்டையில் உள்ளது. தாய் வீட்டிற்கு வந்த பிரியா, உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைப்பெற்றுவரும் தனது தந்தையைக் காண கடலூர் அரசு மருத்துவமனைக்கு சென்றார். குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல விரும்பாத பிரியா, குழந்தையை பக்கத்து வீட்டில் விட்டுவிட்டு தனது கணவருடன் மருத்துவமனைக்குச் சென்றிருந்தார்.

பின்னர், வீடு திரும்பிய தம்பதி, குழந்தையைக் காணாமல் அக்கம் பக்கத்தில் தேடி அலைந்தனர். அப்போது, புதிதாகக் கட்டப்பட்டு திறந்துகிடந்த கழிவுநீர்த்தொட்டியில் தேங்கியிருந்த மழைநீரில் குழந்தை இறந்து கிடந்தது தெரிய வந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பண்ருட்டி காவல் நிலையத்தினர், குழந்தையின் உடலை மீட்டு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : தொலைக்காட்சியில் மூழ்கிய பெற்றோர்; நீரில் மூழ்கிய குழந்தை! - அலட்சியத்தால் இன்னொரு இரண்டு வயதுக் குழந்தை பலி!

ABOUT THE AUTHOR

...view details