தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுதந்திரப் போராட்ட வீரர் ஜெயவீரன் மறைவு- முதலமைச்சர் இரங்கல் - Chief Minister condoles the death of freedom fighter Jayaveera

சென்னை : இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஜெயவீரன் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் ஜெயவீரன் மறைவு- முதலமைச்சர் இரங்கல்
சுதந்திரப் போராட்ட வீரர் ஜெயவீரன் மறைவு- முதலமைச்சர் இரங்கல்

By

Published : Oct 8, 2020, 10:00 PM IST

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் தீர்த்தாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் ஜெயவீரன் அக்.7 ஆம் தேதியன்று உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனைஅடைந்தேன்.

இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட முக்கிய வீரர்களில் ஜெயவீரன் குறிப்பிடத்தக்கவர்.

அவரது தாயார் தென்னாட்டு ஜான்சிராணி என காந்தியடிகளால் போற்றப்பட்ட அஞ்சலை அம்மாள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, சிறையிலிருந்தபோது ஜெயவீரன் பிறந்துள்ளார். அஞ்சலை அம்மாள் சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய தந்தை முருகப்படையாச்சியார் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு பலமுறை சிறை சென்றவர். இவருடைய குடும்பம் முழுவதுமே நாட்டிற்காக பாடுபட்டது.

சுதந்திரப் போராட்ட வீரர் ஜெயவீரன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details