இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு தருமாறு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கின்ற தீர்ப்பு, சமூக நீதிக்கும் இட ஒதுக்கீட்டுக்கும் எதிரான, பெரும் அதிர்ச்சி அளிக்கின்ற தீர்ப்பு ஆகும்.
ஓ.பி.சிக்கான இடஒதுக்கீடு வழங்குவதில் மத்திய அரசு வஞ்சகப்போக்கு - வைகோ தாக்கு! - 50% இட ஒதுக்கீடு
சென்னை : மருத்துவக் கல்வியில் ஓ.பி.சி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு வழங்குவதில் தொடக்கத்தில் இருந்தே வஞ்சகப் போக்கை மத்திய அரசு கடைப்பிடிப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
ஓ.பி.சிக்கான இடஒதுக்கீடு வழங்குவதில் மத்திய அரசு வஞ்சகப்போக்கையே கொண்டிருந்தது - வைகோ தாக்கு!
இந்தப் பிரச்னையில். மத்திய அரசு தொடக்கத்தில் இருந்தே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான வஞ்சகப்போக்கை மேற்கொண்டு வந்ததற்கு மதிமுக சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்" என குறிப்பிட்டுள்ளார்.