மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. ஏறத்தாழ 200 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் சிறப்பு மருத்துவ வசதிகளுடன் அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா 2019ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி நடைபெற்ற நிலையில், மேலதிக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளிவராமல் இருந்தது.
இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமைக்கப்படும் என்ற அறிவிப்பாணை அளவிலேயே இருந்த சூழலில் கரோனா அச்சுறுத்தல், ஊரடங்கு என தொடர் இடர்பாடுகள் ஏற்பட்டு, அதற்கான எந்த பணிகளும் நடைபெறாமல் கிணற்றில் போட்ட கல் போல் இருந்தது. இதனிடையே, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக குழு தொடர்பான அறிவிப்பு மத்திய அரசின் சுகாதாரத்துறை சார்பில் அரசிதழில் இன்று (அக்டோபர் 28) வெளியிடப்பட்டுள்ளது.
அதில், மதுரையில் அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தலைவர் வி.எம்.கடோச் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவக் குழுவில் நிர்வாக உறுப்பினராக தமிழ்நாடு எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக துணைவேந்தரும், ஆன்மிக சொற்பொழிவாளருமான டாக்டர் சுதா சேஷய்யன் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த நிர்வாகக் குழுவில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சைப் பிரிவின் தலைவரும், ஏபிவிபியின் மாநில தலைவருமான சுப்பையா சண்முகம் இடம்பெற்றுள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர் உள்ளிட்ட நிர்வாக குழுவினரை மத்திய அரசு அறிவித்தது! ஆதம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண்மணிக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துவந்ததாக மருத்துவர் சுப்பையா சண்முகம் மீது புகார் அளிக்கப்பட்டு, பின்னர் வாபஸ் பெறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர் உள்ளிட்ட நிர்வாக குழுவினரை மத்திய அரசின் சுகாதாரத்துரை அமைச்சகம் அறிவித்தது!