நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையிலுள்ள 12ஆவது கொண்டை ஊசி வலைவில் கட்டுப்பாட்டினை இழந்து கார் ஒன்று 60 அடி பள்ளத்தில் விழுந்தது.
இதில், நல்வாய்ப்பாகக் காரிலிருந்த இருவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். 60 அடி பள்ளத்தில் கிடந்த இருவரையும் பர்லியாறு பகுதியைச் சேர்ந்த சார்லஸ் என்பவர் அடர்ந்த வனப்பகுதியிலிருந்து மீட்டு வெளியே அழைத்து வந்தார்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் கரூரைச் சேர்ந்த தங்கராஜ் (50), பழனிசாமி (48) என்பது தெரியவந்தது. இருவரும் கூடலூர் அருகிலுள்ள தாளூரிலிருந்து கரூர் பகுதிக்குக் காரில் திரும்பியுள்ளனர்.