கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தின் மூலம் மீட்பு விமானங்களில் இந்தியா அழைத்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்கா, சிங்கபூர்,மலேசியா, குவைத், ரியாத், ஓமன், கத்தாா், துபாய் உள்ளிட்ட நாடுகளிலிருந்து கடந்த இரண்டு தினங்களில் 12 மீட்பு விமானங்களில், ஆயிரத்து 405 இந்தியா்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.
அவர்களில் 840 பேர் வெளிநாடுகளிலேயே மருத்துவ சான்றிதழ்கள் பெற்றுவந்தனர். அவர்களுக்கான சுங்கச் சோதனைகளை முடித்து சுகாதாரத்துறையினா் அவர்கள் கைகளில் தனிமைப்படுத்துதலுக்கான ரப்பா் ஸ்டாம்பு முத்திரையிட்டு அவரவர் வீடுகளுக்கு அனுப்பினர்.