தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அவசரத் திருத்தச் சட்டங்களை எதிர்த்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்! - இந்திய விவசாய சங்கம்

திருச்சி: மின்சார சட்டத் திருத்த மசோதா 2020 உள்ளிட்ட மத்திய அரசின் 4 சட்டங்களை கண்டித்து, இந்திய விவசாய சங்கத்தினர் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவசரத்திருத்த சட்டங்களை எதிர்த்து இந்திய விவசாய சங்கத்தின் சார்பில் திருச்சியில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!
அவசரத்திருத்த சட்டங்களை எதிர்த்து இந்திய விவசாய சங்கத்தின் சார்பில் திருச்சியில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!

By

Published : Jul 27, 2020, 7:20 PM IST

மின்சார சட்டத் திருத்த மசோதா 2020, அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020, வேளாண் உற்பத்திப் பொருட்கள் வணிக ஊக்குவிப்புச் சட்டம் 2020, விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்தப் பாதுகாப்பு அவசரச் சட்டம் 2020 ஆகிய இந்த 4 சட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்த உள்ளதாக அறிய முடிகிறது.

இந்நிலையில், மத்திய அரசின் இந்த முடிவை கண்டித்து, திருச்சி மிளகுப் பாறை பகுதியிலுள்ள சி.பி.ஐ அலுவலகம் முன்பாக கருப்பு கொடி ஏந்திய போராட்டம் இன்று(ஜூலை.27) நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் சிவசூரியன் தலைமை வகித்தார். பின்னர், இது தொடர்பில் பேசிய சிவசூரியன், "நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபட்டுவருகிறது.

உலகப் பேரிடரான கரோனா கால ஊரடங்கில், மக்கள் நலனைக் காப்பதற்குப் பதில், மக்களின் நலன்களுக்கு எதிராகவும், மாநில உரிமைகளுக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

வேளாண்மைக்கு வேட்டு வைத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் தன்மை கொண்ட இந்தக் கறுப்புச் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details