தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

”கந்த சஷ்டி விழா நடத்த அனுமதி வழங்க வேண்டும்” - பாஜக கோரிக்கை - கன்னியாகுமரி செய்திகள்

கன்னியாகுமரி : பாரம்பரிய முறைப்படி ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் கந்த சஷ்டி விழா நடத்த இந்த ஆண்டும் அனுமதி வழங்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

கந்த சஷ்டி விழா நடத்த அனுமதி வழங்க வேண்டும் - பாஜக கோரிக்கை
கந்த சஷ்டி விழா நடத்த அனுமதி வழங்க வேண்டும் - பாஜக கோரிக்கை

By

Published : Nov 14, 2020, 2:46 PM IST

இது தொடர்பாக குமரி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் ஆண்டுதோறும் தமிழ் மாதமான ஐப்பசி மாதத்தில் கோயில் சுற்றுப்புறங்களில் உள்ள மைதானங்களிலும் ரத வீதிகளிலும் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

குமரி மாவட்டத்தில் வேளிமலை குமாரசாமி கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயில், வெள்ளிமலை சுப்ரமணியசாமி கோயில், மருங்கூர் சுப்ரமணிய சுவாமி கோயில், பாலசுப்ரமணிய சுவாமி கோயில், கள்ளியங்காடு சிவன் கோயில், முருகன் குன்றம் வேல்முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் கந்தசஷ்டி விழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு வருகின்ற 15ஆம் தேதியன்று தொடங்கும் சஷ்டி விழா 20ஆம் தேதியன்று சூரசம்ஹாரதோடு நிறைவு பெறும். தற்போது இந்த விழாவுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுக்க வாய்ப்பு உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது. பாரம்பரிய விழாக்களை நடத்த அனுமதி மறுக்கக் கூடாது.

எனவே, கரோனா பரவல் கட்டுப்பாடுகளுடன் கந்தசஷ்டி விழாவை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என பாஜக சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு கேட்டுக் கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details