இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"இறுதி செமஸ்டரில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் வரும் 15ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்திப் பதிவு செய்ய வேண்டும்.
இறுதியாண்டு தவிர்த்து மற்ற ஆண்டுகளில் பயிலும் செமஸ்டர் தேர்வுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் தேர்ச்சி அடைய செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. தற்போது பொறியியல் படிப்புகளில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இறுதி செமஸ்டர் தேர்வுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் தேர்வு எழுதலாம்.