தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

க்ரியா ராமகிருஷ்ணன் மறைவு தமிழ் பதிப்புலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு - டிடிவி தினகரன் - க்ரியா ராமகிருஷ்ணன் மறைவு தமிழ் பதிப்புலகத்திற்கும், தமிழ் மொழிக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு

சென்னை: தமிழ் பதிப்புலகில் தனித்துவமான ஆளுமையாக திகழ்ந்த க்ரியா ராமகிருஷ்ணன் மறைவு தமிழ் பதிப்புலகத்திற்கும், தமிழ் மொழிக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பென அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

க்ரியா ராமகிருஷ்ணன் மறைவு : தமிழ் பதிப்புலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு - டி.டி.வி.தினகரன்
க்ரியா ராமகிருஷ்ணன் மறைவு : தமிழ் பதிப்புலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு - டி.டி.வி.தினகரன்

By

Published : Nov 17, 2020, 3:26 PM IST

இது தொடர்பாக அவர் இன்று (நவ. 17) வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், "தமிழ் பதிப்புலகில் தனித்துவமான ஆளுமையாக திகழ்ந்த க்ரியா ராமகிருஷ்ணன் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன்.

ராமகிருஷ்ணன் அவர்களின் மறைவு தமிழ் பதிப்புலகத்திற்கும், தமிழ் மொழிக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

நவீன யுகத்திற்கு ஏற்ப தமிழுக்கான சொற்களைத் தேடித்தேடி சேகரித்து அவர் வெளியிட்ட அகராதிகளும், மேற்கொண்ட தமிழ்ப்பணிகளும் எப்போதும் மறையாதவை. ராமகிருஷ்ணனை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details