விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி அண்ணா புதுத்தெருவைச் சேர்ந்தவர் சண்முகவேல் ராஜன். இவர் கட்டட கட்டுமான பொருள் விற்பனை செய்துவருகிறார். இவருக்கு அதிமுகவில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மாணவர் அணி அவைத்தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.
சரமாரி வெட்டு
இந்நிலையில் நேற்று இரவு வீட்டிலிருந்து வெளியே வந்த சண்முகவேல் ராஜனை வீட்டு வாசலில் வைத்து அடையாளம் தெரியாத கும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டது.
தகவலறிந்து விருதுநகர் கிழக்கு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சண்முகவேல் ராஜன் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அதிமுக நிர்வாகி சண்முகவேல் ராஜன் முன்விரோதம்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே பகுதியைச் சேர்ந்த அருண் பாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் சண்முகவேல் ராஜன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. காவல் துறையினர் கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிக்க: தந்தையின் அஜாக்கிரதையால் கொதிக்கும் எண்ணெய்யில் விழுந்த சிறுமி... நொடியில் நேர்ந்த துயரம்!