தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை தீவிரமாக நடைபெறுகிறது! - Admission of 11th class students for the academic year is in full swing

சென்னை : சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 2020-2021 ஆம் ஆண்டுக்கான 11 ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

கல்வியாண்டுக்கான 11ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை தீவிரமாக நடைபெறுகிறது !
கல்வியாண்டுக்கான 11ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை தீவிரமாக நடைபெறுகிறது !

By

Published : Aug 24, 2020, 9:55 PM IST

1 ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை கடந்த 17 ஆம் தேதியன்று தொடங்கி நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக 10ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் 11 ஆம் வகுப்பில் சேருவதற்கான சேர்க்கை ஆகஸ்ட் 24 ஆம் தேதி தொடங்கும் என்று அரசு அறிவித்து இருந்தது.

10 ஆம் வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் விரும்பும் பாடப்பிரிவுகள் ஒதுக்கப்பட்டு மாணவர் சேர்க்கை தொடர்ந்து வேகமாக நடைபெற்றது.

மாணவர் சேர்க்கையின்போதே பாடப்புத்ககங்கள், சீருடை உள்ளிட்டவை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அனைத்து பள்ளிகளிலும், கரோனா தடுப்பு நடவடிக்கையாக சேர்க்கையின் போது மாணவர்கள், ஆசிரியர்கள் தனிமனித இடைவெளி பின்பற்றப்பட வேண்டும், முகக் கவசம் அணிய வேண்டும், 1 மணி நேரத்திற்கு 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும், அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் வருகை புரிந்தால் காலை - மாலை என பிரித்து மாணவர் சேர்க்கை மேற்கொள்ள வேண்டும் என்பது போன்ற அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details