தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேசிய தன்னார்வ ரத்ததான நினத்தை முன்னிட்டு சிறப்பு முகாம் நடைபெற்றது! - special camp was held in puthukottai

தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது.

தேசிய தன்னார்வ ரத்த்தான நினத்தை முன்னிட்டு சிறப்பு முகாம் நடைபெற்றது!
தேசிய தன்னார்வ ரத்த்தான நினத்தை முன்னிட்டு சிறப்பு முகாம் நடைபெற்றது!

By

Published : Oct 1, 2020, 8:58 PM IST

புதுக்கோட்டை :தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது.

தேசிய தன்னார்வ ரத்த தான தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 1ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் ரத்த தான நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, இன்று புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது.

இந்த மிகாமில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு, குருதிக்கூடு, ரோட்டரி சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்று ரத்த தானம் வழங்கினர். முகாமில் பங்கேற்றவர்களுக்கு ரத்த வங்கி சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. அதேபோல் தன்னார்வத்தோடு இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக ரத்ததானம் செய்த அமைப்பினருக்கும், தனிப்பட்ட முறையில் தன்னார்வத்தோடு ரத்த தானம் செய்த நபர்களுக்கும் பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை மருத்துவக் கல்லூரி முதல்வர் பூபதி வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இதன்பின் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள பிரேத பரிசோதனை மையத்தை சுற்றி மரக்கன்றுகள் நடப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details