உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. இந்திய அளவில் கரோனா வைரஸ் பாதிப்பில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டத்தை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் அதன் பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது.
குறிப்பாக, கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கரோனா பரவல் தாக்கம் கடந்த சில நாள்களாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 524 நபர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் அனைவரும் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.