சென்னை மெட்ரோ ரயில் கடற்கரை - வேளச்சேரி மார்க்கத்தில் வரும் 4ஆம் தேதி முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் 26 கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும், ஒவ்வொரு வழித்தடத்திலும் 13 ஜோடி ரயில்கள் இயக்கப்படும். பணியாளர்கள், பொதுமக்களின் கூட்டத்தை கருத்தில் கொண்டு கூடுதல் ரயில் சேவைகள் இயக்கப்படுகிறது.
இதற்கு முன்பு இவ்வழித்தடத்தில் 50 ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வந்த சூழலில், தற்போது அவற்றுடன் கூடுதலாக 26 ரயில் சேவைகள் இயக்கப்படும்.
மேலும், சென்னை கடற்கரை - அரக்கோணம் மார்க்கத்தில் பணியாளர் சிறப்பு ரயிலில் கூடுதல் ரயில் ஒன்று இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக அடுத்து வரும் ஞாயிற்றுக் கிழமைகளில் 447 புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.