தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொரியரில் வந்த ரூ.16 லட்சம் மதிப்புடைய உயர் ரக போதை மாத்திரைகள் பறிமுதல்: இருவர் கைது! - சென்னை கொரியரில் வந்த ரூ.16 லட்சம் மதிப்புடைய உயர் ரக போதை மாத்திரைகள் பறிமுதல்

சென்னை: மருந்து பொருள்கள் என்று நெதர்லாந்து நாட்டிலிருந்து வந்த கொரியர் பார்சலில் ரூ.16 லட்சம் மதிப்புடைய 540 உயர் ரக போதை மாத்திரைகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து இருவரை கைது செய்துள்ளனர்.

high-quality drugs seized in Chennai
high-quality drugs seized in Chennai

By

Published : Jul 10, 2020, 12:16 AM IST

நெதர்லாந்து நாட்டிலிருந்து சென்னை விமானநிலையத்திற்கு சரக்கு விமானம் ஒன்று வந்தது. அதில், வந்த கொரியர் பார்சல்களை சுங்கத்துறையினர் ஆய்வு செய்தனர்.

அப்போது நெதர்லாந்திலிருந்து சென்னை முகவரியில் ஒரு பார்சல் வந்திருந்தது. அந்தப் பார்சலில் மருத்துவ பொருள்கள் உள்ளே இருக்கின்றன, மிகவும் அவசரம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நெதர்லாந்திலிருந்து ஏற்கனவே இதேப்போல் மருத்துவ பொருள்கள் என்று வந்த பார்சல்களில் போதை மாத்திரைகள் இருந்ததால் அலுவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனால் இந்தப் பார்சலை தனியே எடுத்து வைத்து ஆய்வு செய்தனா். அதில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரி, செல்போன் எண்கள் போலியானவை என்பதை கண்டுப்பிடித்தனா். இதையடுத்து சந்தேகம் வலுத்தது.

இந்நிலையில் நேற்று (ஜூலை9) காலை விமானநிலைய வளாகத்தில் உள்ள வெளிநாட்டு பாா்சல்களை கையாளும் பாரீன் போஸ்ட் அலுவலகத்திற்கு இரண்டு வெளிமாநில இளைஞா்கள் அந்த பார்சலை டெலிவரி எடுக்க வந்தனர்.

இதையடுத்து, அங்கிருந்த சுங்க அலுவலர்கள் அவா்கள் முன்னிலையில் அந்தப் பாா்சலை திறந்து சோதனையிட்ட போது பார்சலில் 540 உயா்ரக போதை மாத்திரைகள் இருந்ததை கண்டுப்பிடித்தனர். அந்த மாத்திரைகள் லம்பார்கினி எனப்படும் ரகத்தை சேர்ந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.16 லட்சம்.

இதையடுத்து, சுங்கத்துறையினர் பார்சலை பறிமுதல் செய்து டெலிவரி எடுக்க வந்த இளைஞர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அதில், இந்த மாத்திரைகளை மாணவா்கள் அதிகஅளவில் பயன்படுத்துவதாகவும், அதனால் இவர்கள் மாணவா்களுக்கு ரகசியமாக விற்பனை செய்வதற்காக மருந்து பொருள்கள் என்ற பெயரில் போதை மாத்திரைகளை தடைசெய்யப்பட்ட இணையதளத்தை பயன்படுத்தி இறக்குமதி செய்துள்ளது தெரியவந்தது.

இதையும் படிங்க:டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details