இது தொடர்பாக தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் அன்புச்செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர் பங்கேற்கும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறை திருக்குறள் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது.
1330 திருக்குறளை ஒப்புவித்தால் 10 ஆயிரம் ரூபாய் பரிசு! - 1330 Thirukkural Confession Competition
சென்னை : திருக்குறளை இளைய தலைமுறையினரிடம் கொண்டுசேர்க்கும் வகையில் 1,330 குறளை ஒப்புவிக்கும் போட்டியை தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது.
1330 திருக்குறளை ஒப்புவித்தால் 10ஆயிரம் ரூபாய் பரிசு!
அதன்படி மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் இந்தக் குறள் முற்றோதுதல் போட்டியில் பங்கேற்கலாம். 1330 குறளையும் ஒப்பிக்கின்ற மாணவ மாணவியருக்கு ரூபாய் 10 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்படும்.
தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் அலுவலகம், உலக தமிழ் சங்க வளாகம், மதுரை 625020 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பங்களை வழங்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.