தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10 புதிய நீதிபதிகளை உச்ச நீதிமன்ற கொலீஜியம் நியமித்தது!

சென்னை : சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் அனுமதி அளித்துள்ளது.

10 புதிய நீதிபதிகளை உச்ச நீதிமன்ற கொலீஜியம் நியமித்தது!
10 புதிய நீதிபதிகளை உச்ச நீதிமன்ற கொலீஜியம் நியமித்தது!

By

Published : Sep 23, 2020, 7:31 PM IST

Updated : Sep 23, 2020, 7:47 PM IST

சென்னை உயர் நீதிமன்றத்தின் 75 நீதிபதிகளில், தற்போது 54 நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற கிளையில் வழக்குகளை விசாரித்து வருகின்றனர்.

இருப்பினும், அதிகமான வழக்குகள் நிலுவையில் தேங்குவதை தவிர்க்க அவ்வப்போது புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மாவட்ட நீதிபதிகள் தகுதியில் உள்ள 10 பேரை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து உச்ச நீதிமன்ற கொலீஜியம் அனுமதியளித்துள்ளது.

அந்த 10 நீதிபதிகளின் பெயர் பட்டியல் இதோ

1. கண்ணம்மாள் சண்முகசுந்தரம்

2. சத்திகுமார் சுகுமார குருப்

3. முரளி சங்கர் குப்புராஜீ

4. மஞ்சுளா ராமராஜு நல்லையா

5. தமிழ்ச்செல்வி டி வளையபாளையம்

6. சந்திரசேகரன்

7. நக்கீரன்

8. சிவஞானம் வீராசாமி

9. இளங்கோவன் கணேசன்

10. ஆனந்தி சுப்ரமணியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் 10 பேரும் பதவியேற்கும் பட்சத்தில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 64ஆக உயரும் என அறிய முடிகிறது.

Last Updated : Sep 23, 2020, 7:47 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details